இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவினை மக்கள் சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் 500,000 டோஸை மார்ச் மாதத்திலும் மேலும் 500,000 அளவுகளை ஏப்ரல் மாதத்தில் வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு 10 முதல் 12 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் எந்த பற்றாக்குறையும் இருக்காது எனவும் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ஏப்ரல் மாதத்திற்குள் 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இலங்கை திட்டமிட்டபடி பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கபப்டுகின்ற அதேவேளை இலங்கை ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் அவசரகால பயன்பாட்டுக்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தடுப்பூசிக்கு கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.