டுபாயில் இருந்து நாடு திரும்பவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்வதன் ஊடாக, ஏனையோருக்கு முனமாதிரியாக செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் அனைவரும் ஹோட்டல்கள் அல்லது இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது அரசாங்கத்தின் நடைமுறையாகும்.
அந்தவகையில் இந்த நடைமுறைகளை அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டியது அவசிமாகும் மாறாக விதிமுறைகளை மீறி செயற்பட முயற்சித்தால், பொது மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.