அடுத்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வர தயாராகும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் அடுத்த வாரம் நிரப்பபடும் என நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் பெரும்பாலாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்யவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே எதிர்க்கட்சியின் கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் சத்துர சேனாரத்ன ஆகியோர் அண்மையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்மானங்களை எடுக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி, அவரது தாயார் மற்றும் நெருக்கமான மற்றுமொரு நபர் அடிக்கடி சம்பந்தப்படுவதால், அந்த கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சில அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.