மீனம் செல்லும் சூரியன்! இந்த ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாக இருக்கப் போகுதுதாம்!

சூரியன் மீன ராசிக்கு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மாலை 17: 55 மணிக்கு இடம் பெயர்கிறார்.

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சூரியன் இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும். சிலர் இக்காலத்தில் நம்பிக்கையுடன் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும்.

பணியிடத்தில் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறன் குறைவதற்கு வழிவகுக்கும். இருப்பினும், சிலர் வணிக மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புக்களைப் பெறலாம்.

வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த சூரிய இடமாற்றத்தால் பயனடைய வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சட்ட விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். சிலருக்கு இக்காலத்தில் அலுவலகத்தில் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இக்காலத்தில் சில இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

எனவே முதலீடுகளை செய்ய நினைத்திருந்தால், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்ற பின் முடிவுகளை எடுப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, காதலிப்பவர்கள் மற்றும் தம்பதிகள் தங்களின் உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் தேவையற்ற செலவுகளால் கையில் உள்ள பணம் முழுவதும் காலியாகும் என்பதால் செலவழிக்கும் போது கவனமாக இருங்கள்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை, தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த காலத்தில் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனத்தை செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் இடம் பெயர்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கும்.

தொழில் ரீதியாக, இக்காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் பல வழிகளில் சம்பாதித்து, சமூகத்தில் உங்கள் நிலையை அதிகரிப்பீர்கள். நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் இக்காலத்தில் வேகமாக முடிக்கப்படும்.

அதோது இது அதிக லாபத்தையும் ஈட்ட உதவும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கையையும் நம்பிக்கையையும் மேம்படுத்த உதவும். இந்த காலத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவு நல்லுறவுடன் இருக்கும்.

மேலும் அவர்களிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறலாம். சிலர் அரசாங்கத்திடமிருந்து சில நன்மைகளையும் இலாபங்களையும் பெறக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள், குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

இக்காலத்தில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. புதிய முதலீடுகளை செய்வதற்கு இக்காலம் நல்ல காலம். ஒட்டுமொத்தமாக, இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும் காலமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக இந்த ராசிக்காரர்கள் சாதகமான விளைவுகளைக் காண்பார்கள்.

திறமையாக மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசுத் துறையில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

தொழில் வல்லுநர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் அனைத்து முயற்சிகள் மற்றும் பணிகளிலும் உங்கள் உடன்பிறப்புகளிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும். அவை உங்கள் வெற்றியில் மிக முக்கிய பங்கை வகிக்கும்.

காதல் வாழ்க்கை சீராக இருக்கும். உங்கள் உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலிமையுடன் இருந்து, நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இது உங்களின் வருமானம், செல்வம் மற்றும் அந்தஸ்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். தொழில் ரீதியாக, உங்கள் பணியிடத்தில் நீங்கள் சில போட்டிகளை சந்திக்கலாம்.

ஆனால் உங்களின் நிலையான முயற்சிகளால் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள், இக்காலத்தில் எதிர்பார்த்த முடிவுகளையும் நல்ல பணப்புழக்கத்தையும் பெற வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் பாசமும் கிடைக்கும். இக்காலத்தில் நீங்கள் அவர்களுடன் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த காலத்தில் உங்கள் தந்தையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கக்கூடும். எனவே அவரை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக, இக்காலம் அதிக லாபம் மற்றும் உங்கள் நிலையை உயர்த்தக்கூடிய ஒரு சிறந்த காலம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும்.

தொழில் ரீதியாக மெதுவான முன்னேற்றம் மற்றும் பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு விரும்பிய முடிவுகளைப் பெறாதது உங்களுக்கு நம்பிக்கையின்மை, சுய சந்தேகங்கள் மற்றும் உங்கள் எதிர்காலம் குறித்த உங்கள் நிச்சயமற்ற தன்மை மற்றும் கவலையை அதிகரிக்கும். இருப்பினும் உங்கள் திறனில் நம்பிக்கை வைத்திருங்கள்.

உங்கள் திறமைகளில் செயல்படுங்கள் மற்றும் நம்பிக்கையுடன் இருங்கள். பணியிடத்தில் வாக்குவாதங்கள் எழலாம். ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது கடுமையாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.

இல்லையெனில் உங்கள் இமேஜ் பாழாகும். எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள அல்லது எந்தவிதமான முதலீடுகளையும் செய்ய இது ஒரு நல்ல காலம் அல்ல.

ஏனெனில் இவை இரண்டுமே இழப்புகளுக்கு வழிவகுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கலாம். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். தொழில் ரீதியாக, உங்கள் பணியிடத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுடனான தவறான புரிதலால், பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் தடைப்படக்கூடும்.

கூட்டு வணிகம் செய்பவர்கள், சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம் மற்றும் கூட்டாளருடன் மோதல்களும் ஏற்படலாம். எனவே கூட்டு வணிகம் அல்லது கூட்டு முயற்சிகளைத் தொடங்க இது சிறந்த காலம் அல்ல. முதலீடுகளை செய்யும் முன் பெரியவர்களுடன் கலந்தாலோசித்து, பின் செய்யுங்கள்.

இறக்குமதி-ஏற்றுமதி துறைகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் உயரக்கூடும். எனவே உங்கள் வரவிற்கும் செலவிற்கும் இடையில் சரியான சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலத்தில் உங்கள் துணையுடனான உங்கள் உறவு வலுவிழக்கக்கூடும்.

வீட்டு சூழல் அமைதியாக இருக்க வேண்டுமானால், வாதங்கள் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முதுகு வலி மற்றும் வயிறு தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம். எனவே காரமான உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு புனிதமானதாக இருக்கும்.

இக்காலத்தில் நீண்ட காலமாக நீங்கள் கஷ்டப்பட்டு வந்த நோயை எதிர்த்துப் போராட தேவையான வலிமையும் சக்தியும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக, உங்கள் முயற்சிகள் பாராட்டுக்களைப் பெறும்.

பணியிடத்தில் உயர்அதிகாரிகளுடனான உறவு மேம்படும். இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இக்காலத்தில் அவர்களின் முயற்சிகளுக்கு விரும்பிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை, புதிய உறவுகளுக்குள் நுழைய நல்ல காலம். திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் துணையுடன் பரஸ்பர புரிதலையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். ஒட்டுமொத்தமாக, இது உங்கள் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இந்த காலத்தில் பணியிடத்தில் நீங்கள் சிக்கல்களையும் அழுத்தங்களையும் மிகுந்த உறுதியுடன் கையாள்வீர்கள்.

அரசாங்கத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்த காலத்தில் திடீர் இடமாற்றங்கள் அல்லது வேலை விவரங்களில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். வணிகர்களும் இந்த காலகட்டத்தில் சற்று வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் காணலாம்.

எவ்வாறாயினும், போராடும் கலைஞர்கள் அல்லது படைப்பாற்றல் துறைகளில் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தந்தையின் ஆரோக்கியம் குடும்ப சூழலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், உங்கள் துணையுடனான உறவு ஈகோ மற்றும் மனோபாவ வேறுபாடுகளால் சிதைக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, இக்காலத்தில் அஜீரணம், இரைப்பை மற்றும் அமில பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் அம்மாவிற்கு பிபி, கொழுப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு சாதகமற்ற காலம் இது. இந்த காலத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துபவராகவும், சுய நீதிமானாகவும் மாறக்கூடும். இது உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் சமன்பாட்டை சீர்குலைக்கக்கூடும்.

எனவே, உங்கள் வீட்டுச் சூழலில் அமைதி நிலவ வேண்டுமென்றால், உங்களுடைய இந்த போக்கைப் பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள். காதல் தொடர்பான விஷயங்களில், நீங்கள் விரும்பிய முடிவைப் பெறாததால், உங்கள் உணர்வுகளை உங்கள் காதலியிடம் வெளிப்படுத்த இது சரியான நேரம் அல்ல.

திருமணமானவராக இருந்தால், இந்த காலம் உங்கள் துணையுடன் சிறிய விஷயங்களில் சண்டையிடுவதற்கு வழிவகுக்கும். படிப்புகளில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டால், மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.

தொழில் ரீதியாக, மூத்தவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளும் போது உங்கள் சொற்களை சரிபார்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் மன அழுத்தத்தையும் கவலைகளையும் அதிகரிக்கும்.

வர்த்தகர்கள் முதலீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் பலனளிக்க சிறிது காலம் ஆகலாம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகள் உங்களை பலவீனமாகவும் சோம்பலாகவும் ஆக்கலாம். இருப்பினும், நம்பிக்கையுடன் இருப்பதுடன், சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். தொழில் ரீதியாக, இக்காலம் இந்த ராசிக்காரர்களுகு சாதகமான காலமாக இருக்கும். ஏனெனில் தொழில்முறை முன்னணியில் வளர்ச்சியை அனுபவிக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறலாம்.

உங்கள் முயற்சிகள் நேர்மறையான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளதால், இது மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு நிறைந்த காலம்.

இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்த பயணங்களும் உங்களுக்கு சாதகமான விளைவுகளையும் கணிசமான லாபத்தையும் வழங்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்தும். அக்காலத்தில் உங்கள் உடன்பிறப்புகள் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

எனவே அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஃபிட்டாக இருக்க உடற்பயிற்சி மற்றும் டயட் மேற்கொள்ள சிறந்த காலம்.

ஒட்டுமொத்தமாக, ஆரோக்கியம் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. உயர் படிப்புகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் விரும்பிய பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த மாற்றத்தில், உங்கள் மனோபாவத்தையும் தகவல்தொடர்புகளையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

ஏனெனில் இது குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் நண்பர்களுடன் சண்டையிடலாம். பணிபுரிபவர்கள், தங்கள் பணியிடத்தில் சில மாற்றங்களை அல்லது இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். கூட்டாண்மை வணிகம் செய்பவர்கள், கூட்டாளருடன் சில வேறுபாடுகளை அனுபவிக்கக்கூடும்.

ஆகவே, இந்த காலகட்டத்தில் உங்கள் கூட்டாளருடன் வெளிப்படையாகவும், சரியான தகவல்தொடர்புகளையும் பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. முதலீடுகளை செய்ய இது சரியான காலம் அல்ல. சொத்து அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் இருந்து சில திடீர் நன்மைகளைப் பெறலாம்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் துணையின் உடல்நலம் குறைந்து வருவதைக் காணலாம் மற்றும் அவர்களின் உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அவர்களின் சேமிப்பில் பெரும் பகுதியை செலவிட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பார்வை மற்றும் பற்கள் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 1 வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள், இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சரிவை சந்திக்க நேரிடும். அதுவும் தலைவலி, கண்பார்வை, சளி மற்றும் இருமல் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

சிலர் இந்த காலகட்டத்தில் இரத்தம் தொடர்பான சில சிறிய தொற்றுநோய்களையும் சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருங்கள், தேவைப்பட்டால் சரியான மருத்துவ உதவியை மேற்கொள்ளுங்கள்.

தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பணியிடத்தில் சோர்வையும் சோம்பலையும் உணரக்கூடும். இதனால் நீங்கள் வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.

அதோடு இது உங்கள் பணியிடத்தில் உங்கள் உற்பத்தித்திறனுக்கும் நற்பெயருக்கும் இடையூறாக இருக்கும். மேலும், உங்கள் எதிரிகள் உங்களை விட முன்னேற உங்கள் இமேஜை இழிவுபடுத்த திட்டமிட்டிருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள். வணிகர்கள் சாதகமான முடிவுகளை பெறமாட்டார்கள்.

நிதி விஷயத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் கோபம் மற்றும் எரிச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஏனெனில் இது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துணையுடன் வாதங்கள் அல்லது மோதல்களுக்கு வழிவகுக்கும். எனவே, அவர்களுடன் பழகும்போது உங்கள் அமைதியை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.