வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள்.
மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்