கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தொியவருகையில்,
கடந்த 10ம் திகதி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த அருளம்பலம் துஸ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்த்தர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதாகியுள்ள நிலையில் அவரது வீட்டில் சில பொருட்களை எடுப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் சிலர் சென்றிருந்தனர்.
இந் நிலையில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் இணைந்து எதிர்ப்பு தொிவித்தனர்.
அதோடு இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை அவர்கள் எனவும் கூச்சலிட்டுள்ளனர்.
இதனையடுத்து உயரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அத்துடன் சந்தேகநபரின் வீடு தீயிட்டு கொழுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் தீயை அணைத்துள்ளனர்.
மேலும் , பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.