மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் வந்த கணவர் கையும் களவுமாக மனைவியிடம் சிக்கி அவஸ்தை பட்டுள்ளார்.
மீரட்டைச் சேர்ந்த தம்பதியினர் அட்னன் மற்றும் ஆயிஷா. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதுடன், இதுகுறித்து இருவருக்குள்ளும் சண்டையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று கணவரை பின்தொடர்ந்த ஆயிஷாவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் சென்றதை அவதானித்து வெளியிலேயே காத்திருந்துள்ளார்.
அந்நேரம் கணவர் வெளியே வந்ததும் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைக்கண்ட கணவரின் கேர்ள் பிரண்ட் எஸ்கேப் ஆகியுள்ளார்.
இந்த விவாகாரம் பெரிதாக சென்றதால் காவலர்கள் சமாதானப்படுத்த முயன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அட்னன் ஏற்கெனவே ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் அதற்கான ஆதாரத்தினை எதுவும் காட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் பொலிசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது. ஆனால் மனைவி ஆயிஷாவே கணவன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதோடு, புகாரும் கொடுத்துள்ளார்.