யாழில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் தசைப்பிடிப்பிற்கு மசாஜ் செய்ய பெண் அரச அதிகாரியொருவரிடம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் தசைப்பிடிப்பிற்காக மசாஜ் செய்ய பெண் அரச அதிகாரியொருவரிடம் சென்ற நிலை குறித்த பெண் அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்து அவரை திருப்பி அனுப்பியுள்ளார்.
வடக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்தியசாலைகளில் தசைப்பிடிப்பு வசதியுள்ளது, நோயாளிகளிற்கான சிகிச்சை முறைகளில் ஒன்று.
முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவர் சில காலமாக அங்கு முழு உடல் தசைப்பிடிப்பை மேற்கொண்டு வந்துள்ளார்.
அவருக்கு அப்படியெந்த நோயுமில்லை, எனினும் அந்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி அந்த அரசியல்வாதிக்கு மரியாதை நிமித்தமாக அந்த நாட்டை ஏற்பாட்டை செய்து கொடுத்தார். எப்பொழுதாவது இடையிடையிடையே சென்று அந்த அரசியல்வாதி தசைப்பிடிப்பை மேற்கொள்வார்.
எனினும் அந்த பொறுப்பாதிகாரி அண்மையில் இடமாற்றம் பெற்று சென்று விட்டார், தற்போது பெண்ணெருவரே பதவியில் இருப்பிறார்.
குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, மசாஜ் செய்ய வரவா என கேட்டுள்ளார், பெண் அதிகாரியும் சம்மதிக்க அங்கு சென்றுள்ளார்.
அரசியல் பிரமுகர் அங்கு சென்று, மசாஜிற்கு தயாரான போது, இந்த அதிகாரி எதற்காக மசாஜ் செய்கிறீர்கள்? என்ன வருத்தம் என கேட்டுள்ளார்,
வருத்தம் ஒன்றுமில்லை, முழு உடல் மசாஜ் செய்யப் போவதாக அரசியில் பிரமுகர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதை நிராகரித்த பெண் அதிகாரி நோயாளிகளிற்கு மட்டுமே மசாஜ் வசதி வழங்கலாம், நோயாளி அல்லாதவர்கள் கிளப்புகளில் தான் மசாஜ் செய்வார்கள், நீங்கள் வெளியில் சென்று மசாஜ் செய்யுங்கள் என கண்டிப்பாக கூறிவிட்டார்.
இதையடுத்து மசாஜ் பதிவு செய்ய சிட்டையையும் அங்குகேயே வீசியெறிந்து விட்டு திரும்பி வந்துவிட்டார் அந்த அரசியல் பிரமுகர்…