2021-இல் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது தெரியுமா?

2021 ஆம் சூரிய மற்றும் சந்திர கிரகணம் எப்போது என்று பார்ப்போம்.

சந்திர கிரகணம்

  • முழு சந்திர கிரகணம்

2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த கிரகணம் மே 26 பிற்பகல் 2:17 மணிக்கு தொடங்கி இரவு 7:19 மணிக்கு முடிவடையும்.

மேலும் இது தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும்.

  • பகுதி நேர சந்திர கிரகணம்

இந்த சந்திர கிரகணம் ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இது நவம்பர் 18-19 அன்று காலை 11:32 மணிக்கு தொடங்கி மாலை 6:33 மணிக்கு முடிகிறது.

இந்த பெனும்பிரல் கிரகணம் ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, ஆஸ்திரேலியா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதிகளில் தெரியும்.

சூரிய கிரகணம்
  • வருடாந்திர சூரிய கிரகணம்

2021 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 10 ஆம் தேதி அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணம் நிகழப் போகிறது. இது மதியம் 1:42 மணியளவில் தொடங்கி மாலை 6:41 மணிக்கு முடிவடையும்

இந்த சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.

  • முழு சூரிய கிரகணம்

இந்த கிரகணம் ஒரு இடத்தில் தொடங்கி மற்றொரு இடத்தில் முடிகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும்.

டிசம்பர் 4 இது காலை 10:59 மணிக்கு தொடங்கி மாலை 03:07 மணிக்கு முடிவடையும். 2021 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாகும்.

இது ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.