யாழ்ப்பாணம் – நல்லூரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பாரபட்சமற்ற முறையில் செயற்பட வேண்டும் என கோரி யாழ். சிவில் சமூக நிலையம் என்ற அமைப்பினால் உணவு தவிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸாரின் பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று முன் தினம் காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறப்படாது கொட்டகை அமைக்கப்பட்டமை தவறு எனவும் , உடனடியாக இன்று இரவிற்குள் அகற்றுமாறும் தெரிவித்து யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.
முதல்வரின் எழுத்துமூலமான கடிதத்தினை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் வாசித்து காண்பித்தபோது போராட்டக்காரர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் பிழையான செயற்பாடுகள்
01. நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் இப் போராட்டம் ஆரம்பித்த நாளில் இன் நடவடிக்கையை மாநகரசபை எடுக்கத் தவறியதன் காரணம் என்ன?
02.மாநகர முதல்வர் இன்றுடன் முடியும் போராட்டத்திற்கு நேற்று அனுமதி பெறப்படாது கொட்டகை அமைக்கப்பட்டது தவறு உடன் அகற்ற வேண்டும்என கடிதம் அனுப்பக் காரணம் என்ன?
03.தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஓரம் கட்டுவதற்கு, மாநகர மேயரின் சட்ட ஆலோசகரால் மாநகர மேயருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையே இப் போராட்டம் நிறுத்துவதற்காக வழங்கப் பட்ட கடிதம் எனக் கூறப்படுகிறது, ஏன் இந்த நிலை?
04.விலாசம் இல்லாமல் இருந்த போராட்டத்தை ஊடகங்களின் பார்வைக்கு அழைத்துச் சென்றது ஏன்
05.இப் போராட்டத்தை நடத்துவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்காக மாநகர சபை நீதி மன்றத்தை நாடினால், எதிர்வரும் காலங்களில் இதனை ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு நடை பெற உள்ள மக்கள் போராட்டம் அத்தனையையும் பொலிசார் முடக்குவதற்கு ஆதாரமாக அமைந்து வாய்ப்பை ஏற்படுத்த காரணம் என்ன?
06.மணிவண்ணன் தனது எதிர் கால அரசியலிற்கு இதனை ஒரு மூலதனமாக எடுத்துள்மை தெளிவாக தெரிகின்றது, ஏன் இந்த நிலை?
07. எந்த ஒரு மக்களும் திரும்ப்பிப் பார்க்காத இந்த போராட்டத்தை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனின் அரசியல் முதிர்ச்சியால் திரும்பிப் பார்க்க வைத்தமை, இப்படியாக அரசிற்கு சார்பான போராட்டத்தை பேசும் பொருளாக மாற்றிய பெருமை இவ் இருவரையும் சாரும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.