க்ராஷ் ஆன ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்.. கடும் அதிருப்தியில் பயனளார்கள்; கதறும் கூகுள்!

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ஆண்டராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் க்ராஷ் ஆகி வருவதாக பயனளார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், இதை சரி செய்யும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. ஜிமெயில் உட்பட பல அப்ளிகேஷன்களும் க்ராஷ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூ அப்ளிகேஷன் என்ற அப்டேட்தான் இதற்கு காரணம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூகுள் நிறுவனம் தற்போது அந்த சிக்கலை சரி செய்ய முயன்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை எதிர்கொண்டு வரும் பயனர்கள் அடுத்த அப்டேட் வரும் வரை காதிருக்க வேண்டி உள்ளது.

அதுவரை காதிருக்க முடியாதவர்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூவை அன் இன்ஸ்டால் செய்வது அல்லது கூகுள் குரோமை டிசேபிள் செய்வது தான் இப்போதைக்கு உள்ள வழி என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.