யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்குகளை ஹக் செய்து சுமார் 17.20 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஒரு தனியார் வங்கியில் அவரது கணக்கில் 17.2 மில்லியன் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக 2020 ஏப்ரலில் ரூ. 140 மில்லியன் இலங்கையில் பல வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விசாரணைகள் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுத் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.