கலாச்சாரத்தை காப்பாற்ற கழிவு எண்ணெய் ஊற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசமிகள் செயல் என செய்திகள் வெளியான நிலையில் அதனை ஆலய தரப்பு மறுத்துள்ளது.

அத்துடன் , இளைஞர் தரப்பினர் தேர் முட்டிப்பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையிலேயே இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் தாம் இதனை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நல்லூர் ஆலய சூழலில் இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பலரும் கண்டனங்களை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.