வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமியுடன், இளைஞரையும் சேர்த்து கயிற்றால் கட்டி கொடுமைப்படுத்திய கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களால் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த கிராம மக்கள், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக செயல்படாமல், வன்புணர்வு செய்த இளைஞருடன் சேர்த்து இருவரையும் கயிற்றால் கட்டி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இக்காட்சியினை வீடியோவாக எடுத்தும் வெளியிட இணையத்தில் வைரலாகியுள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு, சிறுமியை காப்பகத்தில் விட்டனர்.
மேலும், சிறுமியை அடித்து கொடுமை செய்த குடும்பத்தினரையும், கிராமத்தை சேர்ந்தவர் 6 பேர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
வன்புணர்வு செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.