தமிழகத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணனும் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41), கார் டிரைவர் ஸ்ரீகண்டனுக்கு சொந்தமாக கார் ஒன்று உள்ளது, இதில் புதிதாக கார் ஒன்றை வாங்கியதால் ஸ்ரீகண்டனின் கடன் சுமை அதிகரித்தது.
இதனால் மன உளைச்சல் அதிகமாக மனைவியும் கஷ்டப்படுத்தியுள்ளார், இதனால் மேலும் வருத்தமடைந்த ஸ்ரீகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற ஸ்ரீகண்டனின் மனைவி, அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீகண்டனின் உடலை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து போனதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அவரது அண்ணன் மணிகண்டனுக்கு தெரியவர, மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழ, மருத்துவர்கள் சோதித்த போது அவர் இறந்து போனது தெரியவந்தது.
தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதிர்ச்சியில் அண்ணனும் உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.