தாய்லாந்தில் கழிப்பறைக்கு சென்ற நபர் அங்கு பெரிய மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தாய்லாந்தை சேர்ந்த சோமச்சாய் (45) சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டின் கழிப்பறையில் அமர்ந்திருந்தபோது, அவரது அடிப்பகுதியில் ஏதோ ஒன்று மேல் நோக்கி மோதியதாக உணர்ந்துள்ளார்.
உடனே மேலே எழுந்து பார்த்த போது கழிப்பறை கிண்ணத்திலிருந்து ஒரு பாம்பின் தலையை பார்த்துள்ளார்.
உடனே அவர் அதனை விரட்ட அதன் மீது கழிவறைக்குள் சோப்பு நுரையை ஊற்றமுயன்றுள்ளார், ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் உடனே அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.
சுமார் 8 அடி நீளம் பாம்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாம்பினை பிடிக்க முயன்ற போது அது, கழிவறைக்குள் சென்று விட்டதாகவும், உடனே பாம்பை பிடிக்க வருமாறும் அவரச அழைப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து சோமச்சாய் கூறுகையில், நான் கழிவறைக்குள் சென்ற போது இன்று காலை ஒரு மலைப்பாம்பை பார்த்தேன். என் அடிப்பகுதியில், ஏதோ தள்ளப்படுவதை உணர்ந்தேன். அப்போதுதான் நான் கீழே பார்த்தேன், ஒரு பெரிய மலை பாம்பு இருந்தது.
அதன் தலையை கழிவறை கிண்ணத்தின் விளிம்பில் இருந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தேன் என கூறியுள்ளார்.