கனடாவின் எட்மண்டனில், நோய்க்கிருமிகளைக் கொல்லும் இருக்கைகள் கொண்ட ரயில்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
அந்த ரயில்களிலுள்ள பிளாஸ்டிக்காலான இருக்கைகளிலேயே நோய்க்கிருமிகளைக் கொல்லும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது.
அது இரண்டு மணி நேரத்தில் 99.9 சதவிகிதம் நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடியதாம். இந்த இருக்கைகளை தயாரிப்பது, Uniform Color Company என்னும் அமெரிக்க நிறுவனமாகும்.
பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக எட்மன்டன் ரயில்வே நிர்வாகம் ஏடுத்துள்ள 30 வெவ்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த நோய்க்கிருமிகளைக் கொல்லும் இருக்கையும் ஒன்றாகும்.
இந்த இருக்கைகள் பாக்டீரியங்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களைக் கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றாலும், அவை குறிப்பாக கொரோனாவைக் கொல்லும் வகையில் உருவாக்கப்படவில்லை.