சட்டை போடாமல் அப்பாவியாய் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை! கலாய்த்த நெட்டிசன்களுக்கு மணப்பெண் கொடுத்த பதிலடி

இந்தோனேஷியாவில் அடுத்த கிழக்கு ஜாவாவில் வசிக்கும் சுப்ராப்டோ என்பவருக்கும், எலிண்டா டிவி கிறிஷ்டியானி என்ற பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதுள்ளது.

இதையடுத்து, மணப்பெண் அழகான உடை, மேக்கப் போட்டு, ஆபரண நகைகளுடன் தேவதை போல் வந்து மணப்பேட்டையில் உட்கார்ந்துள்ளார்.

ஆனால், மாப்பிளையோ உடல் முழுவதும் காயம், கட்டுகளுடன் உடலில் சட்டைகூட போடாமல் அரைக்கால் டவுசருடன் அமர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால், மாப்பிளை ஏன் இப்படி இருக்கிறார் என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டனர்.

ஆனால், சிலர் இது அவர்களின் பாரம்பரிய நடைமுறையாக கூட இருக்கலாம் என கூறினர்.

இதற்கு தற்போது விளக்கமளித்துள்ளஅந்த மணப்பெண்., “திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மணமகன் பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் பங்கிற்கு சென்றதாகவும், பெட்ரோல் வாங்கி வரும்போது ஏற்பட்ட தீ விபத்தில் அவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதால் அவரது உடலில் கட்டு போடப்பட்டுள்ளதாகவும்,

அதனால், அவரால் சட்டை அணியமுடியவில்லை எனவும், விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் அந்த பெண் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் மணப்பெண்ணை பாராட்டியும், சோகத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.