அச்சு அசல் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி: வியப்பில் ஆழ்த்திய சம்பவம்

இந்தியாவில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

குஜராத்தின் Seltipada கிராமத்தில் Ajaybhai Vasava என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் குட்டியை ஈன்றுள்ளது.

நான்கு கால்கள், காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு மனித முகம் போன்று இருந்ததால் Ajaybhai Vasava அதிர்ச்சியடைந்தார்.

வால்கள் ஏதுமின்றி நெற்றி, கண்கள், வாய் அனைத்தும் சரியாக பார்ப்பதற்கு மனித முகம் போன்றே இருந்துள்ளது.

குறித்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்த ஆட்டுக்குட்டி இறந்து விட்டது, மூதாதையர்களின் மறுபிறப்பே இந்த ஆட்டுக்குட்டி என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.