கூலிதொழிலாளியிடம் சிக்கி புழுவாய் துடித்த 17 வயது சிறுமி… அதிரடியாக கிடைத்த தண்டனை

திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.பின்னர், வாசுதேவன் அந்த சிறுமியை கஞ்சா போதையில் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வாசுதேவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை நேற்று மாலை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.