இந்தியாவில் அக்கா கணவர் மற்றும் நண்பர்கள், வீட்டு முதலாளி அவரது உறவினர்கள் என 13 பேர் சேர்ந்து 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தனது அக்காவீட்டில் தங்கி அருகில் இருந்த வீடு ஒன்றில் வீட்டு வெலை செய்து வந்துள்ளார் 14 வயது சிறுமி.
இந்நிலையில் அக்காவின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள், வேலை பார்த்த வீட்டின் முதலாளி மற்றும் அவரது உறவினர்கள் என கூட்டு சேர்ந்து 13 பேர் சிறுமியை அடுத்தடுத்து வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதோடு, சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் தலைமறைவான நிலையில் மற்ற 12 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவங்களுக்கு சிறுமியின் தாய் மகேஷ்வரி உடந்தையாக தெரியவந்தநிலையில் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.