சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இதயத்தை தானமாக கொடுக்க இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள பவித்ரா, கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்த பவித்ரா, தாய்- தந்தையுடன் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் பாஸ்கருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மஞ்சள் காமாலை தீவிரமடைந்ததால், கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததும், இதயத்தில் துளை இருந்ததும் தெரியவந்தது.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பவித்ரா, அப்பாவுக்கு தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முடிவெடுத்தார், இதன்படி கடிதம் எழுதிவிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில், எனது இதயம் மற்றும் கல்லீரலை தந்தைக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா . எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி அப்பா, அம்மா கிடைக்க மாட்டாங்க . நான் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ இனிமேல் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.