ஒரே நாளில் 44 பேர் பலி! சென்னையில் 3,400… தமிழ்நாட்டில் 11,000-ஐ நெருங்கியது கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ம் திகதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 20-ம் திகதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,941 ஆக அதிகரித்துள்ளது, 44 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் புதிதாக 3347 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 15) மொத்தம் 10,02,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 9,14,119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.

[JACLN ]

வீட்டில் உட்பட மொத்தம் 75,116 சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்த பலி எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.