இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பினையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே நடக்கும் பல சம்பவங்கள் வேதனையை அளித்து வருகின்றது.
கொரோனாவினால் மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா என பல மாநிலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் பாதித்து வருவதுடன், உயிரிழப்பும் அதிகமாக நிகழ்கின்றது.
இறந்த உடல்களை எரிக்கமுடியாமல் டோக்கன் வாங்கிக்கொண்டு பபல மணிநேரங்கள் காத்துக்கொண்டிருக்கும் வேதனையான சம்பவம் நடந்துள்ளது.
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த Manisha Jadhav(51) என்ற பெண் மருத்துவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பு சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கடந்த 12ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துள்ளார். இறப்பதற்கு முன்பு முகநூலில், இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கும் என்றும், உடல் இறக்கலாம் ஆன்மா இறக்காது என்று கூறியுள்ளார்.
இதே போன்று டெல்லியில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் இல்லாமல் கண்முன்னே உயிரிழந்துள்ளார்.
தந்தையின் இறப்பை கண்முன்னே அவதானித்த மகன் இவ்வளவு பணம் இருந்தும் காப்பாற்றமுடியவில்லையே என காசை அள்ளிவிசீ கதறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஸன் பற்றாக்குறை என்பதால் தொழிற்சாலைக்கு உறவினர்கள் சிலிண்டருடன் வருசையில் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிகிச்சை அளிக்கப்படாத தாய்க்காக நடுரோட்டில் காருக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கிய பின்பு, அவரது தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.