பெற்ற தாயை கொலை செய்து சாப்பிட்ட மகன்: சிக்கியது எப்படி?

தமது தாயை கொலை செய்து அவரது உடல் எச்சங்களை வெட்டி சாப்பிட்டதாக ஸ்பெயினில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

மரியா சோலேடாட் கோமெஸ்(66). இவரது மகன் ஆல்பர்டோ(26). குறித்த தாயை சில நாட்களாக காணவில்லை என்பதால் அவரின் நண்பரான ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பின்பு பொலிசாரின் விசாரணையில், ஆல்பர்டோ தனது தாயை கழுத்தை நெறித்து கொலை செய்ததுடன், அவர் துண்டுதுண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாயின் உடல் பாகங்களை நாய்க்கு உணவாக போட்டதும் தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வீடு முழுவதும் அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் சில உடல் பாகங்கள் சிறு பிளாஸ்டிக் பெட்டகங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, போதைப் பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

மேலும் தாய்க்கும் அவருக்கு ஏற்கெனவே பகை இருந்த நிலையில், பொலிசார் தாயின் வீட்டிற்கு செல்வதற்கு தடை விதித்ததையும் மீறி இவ்வாறு செய்துள்ளார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட இளைஞருக்கு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.