ஐரோப்பாவை போன்று திணறி வருகிறதா இந்தியா? உயிர் பிழைக்க அலையும் மக்கள்: காத்திருக்கும் சடலங்கள்

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் எப்படி திணறி வந்ததோ, அதே போன்ற நிலையில் தான் இப்போது இந்தியா இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அப்படியே ஐரோப்பிய நாடுகளில் மெல்ல மெல்ல பரவி பல லட்சம் உயிர்களை எடுத்தது. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்தது.

அதிலும் பிரேசில் கொரோனாவால் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தது. இப்போது தான் ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி மூலம் நோயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அப்போது எல்லாம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லை. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில மயானத்தில் சடலங்கள் வெளியில் எரிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் ஐரோப்பாவில் சில நாடுகளில் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் இல்லாமல் ஏராளமான உயிர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளில் ஏற்பட்டது.

அது போன்று இப்போது டெல்லியில், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் தள்ளாடி வருகிறது. மக்கள் உயிர் பிழைப்பதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தேடி வருகின்றனர்.

ஆக்ஸிஜன் இல்லாத, இதே நிலை நீடித்தால், இந்தியாவில் இன்னும் பல லட்சம் உயிர்களை சந்திக்க நேரிடும். அதே சமயம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களால் இயன்ற உதவியை நிச்சயம் செய்வோம் என்று உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.