கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற தந்தைக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்து 25 வயது மகன் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காத்தவராயன். இவரது மகன் சுரேந்தர் மற்றும் மகளை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து நல்லபடியாக வளர்த்ததுடன் மகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.
தங்கைக்கு திருமணமான நிலையில் சுரேந்தர்(25) முதுநிலை பொறியியல் பட்டதாரியான குடிமைப்பணிகள் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
முதல் தேர்வில் தோல்வியை சந்தித்த சுரேந்தர் இரண்டாவது தேர்வுக்கு தயாராகிக்கொண்ட போது தந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
தந்தையின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து போனதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவதானித்துள்ளனர். அப்பொழுது மஞ்சள் காமாலை என்று முதலில் கூறிய நிலையில், சித்த மருத்துவம், மற்றும் பெரிய பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்ற சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் இறுதியில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதுடன், உடனே உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.
மாற்று உறுப்பு பெற அரசு விதிகளின் படி சீனியாரிட்டி அடிப்படையில் உறுப்புகள் கிடைப்பதற்கு, 6 மாதம் காத்திருந்த நிலையில், இனிமேலும் தாமதம் செய்யமுடியாது என்று கூறியதால், சுரேந்தரரின் தாய் கல்லீரல் தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் சுரேந்தர் தனது கல்லீரலை தானமாக கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
தனது முடிவினை கேட்டு வீட்டில் அனைவரும் மவுனம் காத்த நிலையில், தந்தையும் 60 வயது ஆகிவிட்டது வாழ்ந்துவிட்டது இனி நான் என்ன செய்யப்போகிறேன் என்று கேள்வி எழுப்பியும், சுரேந்தர் தனது முடிவில் உறுதுணையாக இருந்துள்ளார்.
வாழ்வில் இனி நான் பல சாதனைகளை செய்யப் போகிறேன் அந்த வெற்றிப்பயணத்தில் என்னுடன் நீங்களும் நிஜத்தில் இருக்க வேண்டும், நினைவுகளில் அல்ல என்று நான் சொன்ன வார்த்தை அப்பாவை சம்மதிக்க வைத்துள்ளார்.
முதலில் மருத்துவர்கள் தயங்கிய நிலையில், சுரேந்திரரின் தன்னம்பிக்கையைப் பார்த்து சம்மதம் தெரிவித்துள்ளனர். உறுப்ப தானம் செய்வதற்கு சட்டப்படி அனுமதி பெற்றதோடு, டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் தேதி சிகிச்சை செய்து தனது கல்லீரலை தந்தைக்கு தானமாக கொடுத்தள்ளார்.
இறுதி நிமிடத்தில் குடும்பத்தினர் தனது நம்பிக்கையை குறைத்து விடக்கூடாது என்பதற்காக 4 மணி அறுவைசிகிச்சையை 8 மணிக்கு என்று கூறி அனைவரையும் தாமதமாக வரவழைத்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த அன்றே சுரேந்தர் கண்விழித்த நிலையில், அவரது தந்தை 3 நாட்கள் கழித்த பின்னரே கண் விழித்துள்ளார். அத்தருணத்தில் தந்தை தன்னை பார்த்து புன்னகைத்த நிமிடம் தனது வாழ்வில் சாவிலும் மறக்கமுடியாது என்று சுரேந்தர் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சையில் சுரேந்தருக்கு 35 தையல் போடப்பட்ட நிலையில், அவரது தந்தைக்கு 45 தையல் போடப்பட்டதாம். 3 மாதங்கள் கடும் சிரமத்தினை சந்தித்த இரண்டு பேரும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பணியில் சேரவிருப்பதாகவும் சுரேந்தர் கூறியுள்ளார்.
மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்காக வழங்கப்படும் விருதுகள் பட்டியலில் “லைஃப் சேவியர்” விருதைப் பெற்றுள்ளார் சுரேந்தர்.