வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்ததைப்போல், மே 15-க்குள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வந்தது.
அதே சமயம் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கவுண்ட் நீக்கப்படாது என்றும், ஆனால் சில அடிப்படை அம்சங்களை மட்டுப்படுத்தும் என தெரிவித்தது.
அதில், புதிய தனியுரிமைக் கொள்கை சார்ந்த நினைவூட்டல்களுக்குப் பிறகும் கூட அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் சில அடிப்படை அம்சங்களை, அதாவது உள்வரும் அழைப்புகள் அல்லது நோட்டிபிக்கேஷன்ஸ் போன்றவைகளை பெற இயலாமல் போகலாம் என தெரிவிக்கிறது.
இந்த நிலையில், வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கைகளை விமர்ச்சித்து வரும் பிற நிறுவனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாட்ஸ் அப் ஏன் நீங்கள் இதையெல்லாம் செய்யுறது இல்லையா? என்பதுபோல் ஒரு பதிலடி கொடுத்துள்ளது.
அதில், இன்க் 42 வெளியான அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆப்கள் ஒரே அளவில் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களின் தரவை சேகரிக்கின்றன என்று கூறியுள்ளது.
வாட்ஸ்அப் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், Zomato, Ola, Koo, BigBasket, Truecaller மற்றும் அரசாங்கத்தின் தொடர்புத் தடமறிதல் பயன்பாடான ஆரோக்யா சேது மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப மேஜர்களான மைக்ரோசாப்ட், கூகுள், ஸூம் ஆகியவற்றை வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பல இணைய அடிப்படையிலான ஆப்கள் மற்றும் வலைத்தளங்களின் தனியுரிமை கொள்கைகளில் அவர்கள் சேகரிக்கும் தகவல்களை விவரிக்கும் விதிகள் அடங்கியுள்ளன.
மே 15-க்கு பலரும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்…