ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக்குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளில் தண்ணீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம்.
எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தை குடிக்கிறாரோ அப்போது அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும்.
எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும்.
இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.
நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல், அடிக்கடி சிறுநீர் கழித்து வருவதை, நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்பதைக் காணொளியில் காணலாம்.