அறையில் கிடந்த மணப்பெணின் பிணம்! இறுதியில் தங்கையை கரம்பிடித்த மணமகன்.. பேரதிர்ச்சியில் ஆடிப்போன உறவுகள்

உத்தரப்பிரதேசத்தில் மணமகள் இறந்ததால், அவரின் உடலை ஓர் அறையில் வைத்துவிட்டு உறவினர்கள் மணமகனுக்கு மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்துவைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், எட்டவா மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது.

அந்த விழாவில் உறவினர்கள் புடைசூழ சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணமகன், மணமகள் இருவரும் மாலையை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, திடீரென மணப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து, கண் விழிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக மணப்பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டபத்துக்கு வந்த மருத்துவர், பரிசோதனை செய்து பார்த்ததில் மணப்பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அங்கு கூடியிருந்த இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தடைபட்ட திருமணத்தை உடனடியாக நடத்த திட்டமிட்ட உறவினர்கள், மணப்பெண்ணின் தங்கையை அழைத்து, மணமகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இருவீட்டார் மற்றும் மண மக்களின் சம்மதத்துடன் கண்ணீர் மல்க திருமணம் நடைபெற்றது. அதுவரை இறந்த மணப்பெண்ணின் உடலை உறவினர்கள் ஓர் அறையில் வைத்தனர்.

சந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சுரபி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்துக்காக இருவீட்டாரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மண நாளின்போது சடங்கு முறைகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

தாலி கட்டும்போது மணமகனும், மணமகளும் மாலையை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டனர். அப்போது, மணமகளான சுரபி திடீரென மயங்கி விழுந்தார்.

இது அங்கு கூடியிருநவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை பரிசோதித்த அங்கிருந்தவர்கள் மருத்துவரை அழைத்தனர்.

விரைவாக அங்கு வந்த மருத்துவர் பரிசோதனை செய்ததில் மணமகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுரபியின் தம்பி, தனது அக்கா மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னசெய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனக் உறவினர்கள் கூறியதாக தெரிவித்த அவர், தனது மற்றொரு தங்கையான நிஷாவை மணமகனுக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவெடுத்தனர்.

அதன்படி, அக்கா சுரபியின் உடலை ஓர் அறையில் வைத்துவிட்டு திருமண நிகழ்வை தொடர்ந்ததாகவும், திருமணம் முடிந்த பிறகு சுரபிக்கான இறுதி மரியாதை செய்யப்படதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோன்றதொரு நிகழ்வு ஒடிசாவிலும் நடைபெற்றது.

திருமணம் முடிந்தபிறகு தாய், தந்தையை பிரிந்து செல்லமுடியாமல் அழுத மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருமணம் முடிந்து சில மணி நேரங்களில் மணப்பெண் உயிரிழந்தது, இரு வீட்டாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.