இந்த நம்பரை பயன்படுத்தினாலே சாவு தான்.. பீதியை ஏற்படுத்திய மர்மான சம்பவங்கள்!

பொதுவாக சிறுவயதில், 13 நம்பர் வீடு என்ற ஒரு பேய் படம் பார்த்திருப்பீர்கள் உலகம் முழுவதும் இந்த 13 ம் நம்பர் என்பது ஒரு பேய் எண்ணாக பார்க்கப்படுகிறது.

இந்த 13 என்ற எண்ணை பலர் தவிர்த்திருக்கிறார்கள். மிகப்பெரிய கட்டிடங்களில் 13-வது மாடி என்ற மாடியை விட்டுவிட்டு 12-க்கு பிறகு 14வது மாடி என எண்ணை மாற்றி விடுவார்கள்.

மேலும், 13வது மாடி என்ற விஷயத்தை மறந்து விடுவார்கள். பல கட்டிடங்கள் அல்லதுஓட்டல்களில் 13வது எண் கொண்ட ரூம் கூட இருக்காது.

அந்த அளவிற்கு 13வது எண் என்பது ஒரு பேய் வீடு என்ற மன நிலை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இருக்கிறது.

அந்த வகையில், பல்கேரியா நாட்டில் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் 0888 888 888 என்ற போன் நம்பரில் மர்மம் அடங்கியிருப்பதாகவும் அந்த போன் நம்பர் வைத்திருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதாகவும் அதனால் இனி அந்த நம்பரை யாருக்கு வழங்க வேண்டாம் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இந்த எண்ணை முதன் முதலில் அந்நாட்டின் மொபிடெல் எனும் நெட்வோர்க் கம்பெனியின் சிஇஓ விளாடிமிர் கிராஸ்நவ் என்பவர் வைத்திருந்தார். இந்த எண் அவரிடமிருந்த போது அவருக்க திடீரென கேன்சர் நோய் ஏற்பட்டது.

அதனால் அவர் தனது48 வது வயதில் யாரும் எதிர்பாராத விதமாக உயிரிந்தார். இவரது மரணத்தை பார்க்கும் போது சாதாரணமாக தெரியலாம் ஆனால் இல்லை இவருக்கு கேன்சர் வர காரணம் ஏதோ ரேடியா ஆக்டிவ் கொண்ட பொருளை இவர் பயன்படுத்தியதாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கிறது.

ஆனால், அவர் வீட்டிலோ அலுவலகத்திலோ காரிலோ அல்லது எங்குமே ரேடியோ ஆக்டிவ் பொருட்கள் இல்லை. இதில் ஏதோ மர்மம் இப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரண்டாவதாக இந்த எண்ணை அந்நாட்டில் பிரபலமாக இருந்த மாஃபியா டான் கான்சன்டீன் டிமிட்ரோவ் என்பவரிடம் சென்றது.

அவரும் சுமார் 500 மில்லியன் யூரோ மதிப்பிலான போதை பொருட்களை கடத்தியுள்ளதால், அந்த நம்பரை வாங்கி சில நாட்களில் 2003ம் ஆண்டு எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவர் சாகும்போது அந்த நம்பர் கொண்ட பாக்கெட் அவன் கையில் தான் இருந்துள்ளது.

அடுத்ததாக, கான்ஸ்டன்டீன் டிமிட்ரோவ் இறந்த பிறகு அந்த எண்ணை அவரது சகோதரர் கான்ஸ்டன்டீன் டிஸ்லீவ் என்பவர் வைத்திருந்தார்.

அவர் அந்த எண்ணை பயன்படுத்த துவங்கிய சில நாட்களில் ஒரு இந்திய ரெஸ்டாரென்ட் முன்பு எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இருப்பதற்கு முன்பு அந்நாட்டில் அதிகமாக கொக்கைன் வியாபாரம் கள்ள சந்தையில் செய்து வந்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அந்த எண்ணை மற்றவர்களுக்கு கொடுக்க மொபிடெல் நிறுவனம் மறுத்துவிட்டது. அந்த எண்ணிற்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது.

அந்த எண்ணை பயன்படுத்துபவர்கள் எல்லாம் உயிரை இழக்கிறார்கள்.யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக குறுகிய காலத்தில் அவர்கள் உயிரை இழக்கிறார்கள் என அந்நிறுவனம் முடிவு செய்து அதை யாருக்கும் ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து அந்நிறுவனம் பதில் சொல்ல மறுத்துவிட்டது. உண்மையில் இந்த எண்ணில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா? இல்லையா என்பது ஒரு புதிராகவே உள்ளது.