வடக்கு லண்டனில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு சமூக சேவகர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 வயதான சமூக சேவகர் மீது பல முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு பொலிஸ் அதிகாரி வெட்டப்பட்டார் எனவும், இரண்டாவது அதிகாரி தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள் இருவரும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் அறிந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் “லண்டன் வாழ் மக்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை காட்டிநிற்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.