யாழ்ப்பாணத்தில் பிறந்த கம்சாயினி மூன்று வயதில் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார். இவர் ஒசுலோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியலில் பட்டம் பெற்றவர்.
2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நோர்வே தீவிரவாதத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்.
இவர் தாக்குதல் நடைபெற்ற தீவில் இருந்து கடலில் நீந்தி வந்து உயிர் தப்பினார்.
கம்சாயினி தொழிற்கட்சியின் ஒசுலோ மாநகரக் கிளை துணைத் தலைவராகவும், இளைஞர் பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.
ஒசுலோ மாநகர சபையின் உறுப்பினராக 2007 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக மாநகரசபை உறுப்பினரானார்.
2015 அக்டோபர் 21 இல் ஒசுலோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
நேற்று நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் தெரிவாகியுள்ளார்.