கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு செல்கிறது. கொட்டும் மழையிலும் தங்கம் விலை மட்டுமெ குறையாமல் உள்ளது. ஒரு சில நாட்களில் தங்கம் விலை குறைந்தாலும் அடுத்த நாளே ஏற்றம் காணப்படுகிறது.
இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளான இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.
அதன் படி சென்னையில் இன்று நவம்பர் 19 ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,629 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 42 ரூபாய் குறைந்து 37,032 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலையானது ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,993 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கம் 42 ரூபாய் குறைந்து 39,944 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையானது, ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.71.10 ஆக இருந்தது. இன்று அது ரூ.70.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,810 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,600 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,645 ஆகவும், கேரளாவில் ரூ.4,606 ஆகவும், டெல்லியில் ரூ.4,805 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,830 ஆகவும், ஒசூரில் ரூ.4,641 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,638 ஆகவும் இருக்கிறது.