பிரித்தானியாவின் லண்டன் பெக்ஸ்லி ஹீதில் உள்ள குடியிருப்பில் இலங்கை திருகோண்மலையை சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு பிஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த தீ விபத்திற்கு வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்தமையே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நிரூபா என்ற இரு பிள்ளைகளின் தாயாரும், அண்மையில் இலங்கையிலிருந்து சென்ற நிருபாவின் அம்மாவும் இணைந்து வீட்டின் கீழ் உள்ள படிகளில், தீபங்களை ஏற்றி வைத்துள்ளார்கள்.
இதன்போது பரவிய தீ காரணமாக அவர்களால் கீழே செல்ல முடியவில்லை என கூறப்படுகின்றது. அதேவேஎளை உள்ளே உறங்கிக் கொண்டு இருந்த நிருபாவின் கணவரின் தம்பி, நெருப்பின் புகை காரணமாக எழுந்து, ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார்.
புலம்பெயர் நாட்டிலும் எமது கலாச்சாரங்களை கடைப்பிடிப்பது சிறந்த விடயமாகும். ஆனால் அது உங்களின் உயிரி பறிக்குமளவிற்கு இருக்ககூடாது.
நாம் வாழும் சூழல் மாறிய பின்பும் அதே பாணியில் நாம் பண்டிகைகளை கொண்டாட நினைப்பது சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிகின்றது என்பதை பிரித்தானியாவில் இடம்பெற்ற இந்த துன்பமான சம்பவத்துடன் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் உணர்ந்திருக்கிறோம்.
வீட்டில் அதிக நேரம் சுவாமிப்பட விளக்கை எரிய விடுவதும் பல நேரங்களில் விளக்கு ஏற்றியதையே மறந்துவிடுவதும் இன்னும் பல வீடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நம் நாட்டு வீடுகளைப்போலல்லாது புலம்பெயர் தேசத்தில் பலகைகளால் கட்டப்பட்டு எரிவாய்வு line பொருத்தப்பட்ட வீடுகளில் ஒரு சின்ன தீப்பொறி பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இதேவேளை கடந்த சில வருடங்களின் முன்னர் வீட்டில் ஊது பத்தி கொழுத்தி வைத்து, அதில் தீ பிடித்து ஒரு தமிழ் குடும்பத்தில் சிலர் இறந்த சம்பவங்களையும் நாம் மறந்துவிடலாகாது.
நம் நாட்டில் கொண்டாடியது போல் வெளிநாடுகளில் பண்டிகைகள் கொண்டாடுவது உண்மையில் ஆபத்தானது என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே எந்த பண்டிகையை நாம் கொண்டாடினாலும் சூழலுக்கு ஏற்ற வகையில் அதை பாதுகாப்பாக கொண்டாடி இவ்வாறான உயிர் சேதங்கள் ஏற்படுவதை இனியாவது தவிர்ப்போம்.
உள்நாட்டுபோருக்கு அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு, அதனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டில் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல்