பிரித்தானியாவில் பட்டப்பகலில் இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த நிலை! கமெராவில் பதிவான காட்சி

பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் இஸ்லாமிய வெறுப்பு துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Nottinghamshire-ல் கடந்த 19-ஆம் திகதி இஸ்லாமிய பெண் ஒருவர் மற்றொரு பெண்ணால் வெறுக்கப்பட்டு பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளிக் கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் Nottinghamshire-ல் உள்ள Mansfield பகுதியில், இரண்டு இஸ்லாமிய பெண்கள், மூன்று வயது சிறுவனுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களை குறுக்கிட்ட பெண் ஒருவர் அவர்களை கூச்சலிட்டு கத்தினார்.

அதன் பின் அங்கிருக்கும் நபரால் குறித்த பெண் தடுக்கப்பட, அதைத் தொடர்ந்து பொலிஸார் அப்பகுதிக்கு வந்தனர். அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், மெட்ரோ கோ யூகேவிற்கு Mansfield-ஐ சேர்ந்த Dina Singh என்பவர் பிரத்யேகமாக இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

அதில், நான் என் தோழியும் அன்றைய தினம் ஷாப்பிங் செய்வதற்காக அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, யார் என்றே தெரியாத பெண் ஒருவரால் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக குறிவைக்கப்பட்டு இஸ்லாமிய வெறுப்பு துஷ்பிரயோகத்திற்குள்ளானேன்.

முதலில் நான் தனியாக நடந்து வந்த போது, அந்த பெண் பேச துவங்கினார். நான் அப்போது அவர்களிடம் விலகிச் செல்லுங்கள் என்று கூறினேன், உடனே அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

நான் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நடந்து சென்றேன். அப்போது அங்கு என் தோழியை சந்தித்தேன். அவருடன் சிறுவன் இருந்தான். நாங்கள் மூன்று பேரும் திரும்பி சென்றோம்.

அப்போது, அந்த பெண் மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தார். நான் உடனே உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன், உடனே அவர் என் சகோதரன் போரில் இறந்தது உங்களால் தான், உன் மதத்தை கேள் என்று கூறிவிட்டு, எங்களை பயங்கரவாதிகள் என்று கத்த ஆரம்பித்தாள்.

இது மிகவும் வெறுப்பாக இருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த இளைஞன் ஒருவர் எங்களுக்கு இடையே நின்று தடுத்தான். நாங்களும் பிரித்தானியர்களாக பிறந்து வளர்ந்தவர்கள்.

எனவே நாங்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் இது எங்களுக்கு எதிரானது என்று நீங்கள் கூற முடியாது. நாங்கள் ஆடை அணிந்த விதம் மற்றும் நாங்கள் இஸ்லாமியர்கள் என்ற உண்மையின் காரணமாக தான் இப்படி பேசினார் என்று நினைக்கும் போது, ஏமாற்றமாக இருக்கிறது.

இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை. இது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் சொந்த ஊரில் நீங்கள் விரும்பப்படாதது போல் உணர வைக்கிறது என்று கூறியுள்ளார்.

Nottinghamshire காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 19-ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.