பலனளிக்காத குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை! 44 குழந்தைகளை பெற்ற பெண்.. தலைசுற்றவைக்கும் பின்னணி

உகண்டாவை சேர்ந்த 40 வயதான பெண் இதுவரை 44 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ஒரு கணவர் மூலமே அனைத்து குழந்தைகளையும் பெற்றுள்ளார் மாமா உகண்டா என்று அழைக்கப்படும் பெண்.

எந்தவொரு சிறப்பு மருத்துவ நடைமுறையையும் மேற்கொள்ளாமல் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். 12 வயதில் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.

தற்போது வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் திருடி கொண்டு அப்பெண்ணை தவிக்கவிட்டு அவர் கணவர் எங்கேயோ சென்றுவிட்டார்.

இதையடுத்து 44 குழந்தைகளுக்கு தாயான அவர் தனியாக அவர்களை சிரமத்துடன் கவனிக்கிறார். 44 குழந்தைகளில் 6 பேர் இறந்துவிட்டனர் என தெரியவந்துள்ளது.

அவருக்கு மொத்தம் 22 ஆண் பிள்ளைகளும் 16 பெண் பிள்ளைகளும் தற்போது உள்ளனர். இதில் பல பிரசவத்தில் அவருக்கு ஒரே நேரத்தில் 5 குழந்தைகள், மூன்று குழந்தைகள் மற்றும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறை வேலை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.