பழங்கால நம்பிக்கைகளின்படி உடல் எடையை குறைக்க தேன் மற்றும் பூண்டு உதவுவதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் தேன் மற்றும் பூண்டு ஆகியவை சேர்ந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதாகவும் மற்றும் அதிக எடையை குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கலவையாக இருக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
எடை இழப்புக்கு பூண்டு மற்றும் தேன் எவ்வாறு உதவுகிறது?
பூண்டு
பூண்டு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த சக்தியாகும். இதில் வைட்டமின் பி 6 மற்றும் சி, ஃபைபர், மாங்கனீசு, கால்சியம் ஆகியவை நிரம்பியுள்ளது. இது உங்கள் உடல் எடையைகுறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆய்வக சோதனையின்படி, எட்டு வாரங்களுக்கு பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பின் சதவீதத்தைக் குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
தேன்
இது உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. இது ஆற்றலுக்கான குளுக்கோஸை உற்பத்தி செய்ய உதவுகிறது.
குளுக்கோஸ் மூளையின் சர்க்கரை அளவை அதிகமாக வைத்திருக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிட கட்டாயப்படுத்துகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
பூண்டு மற்றும் தேனை எவ்வாறு உட்கொள்வது?
ஒரு சில பூண்டுகளை தோலை நீக்கி இடித்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கப்பில் ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து நசுக்கிவைக்கப்பட்ட பூண்டுடன் கலக்கவும்.
இந்த இரண்டு பொருட்களையும் சரியாக கலந்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை காலையில் வெறும் சாப்பிட வேண்டியது அவசியம். இதனை அதிகமாக செய்து 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க சாப்பிடலாம். இந்த கலவையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.