சக ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தத்தினால் பாடசாலை ஆசிரியர் தற்கொலை

திருச்சியில் சக ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தத்தால் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி தொட்டியம் அருகே உள்ள கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் இயல்பாகவே ஆன்மீகத்திலும், மாணவர்களின் நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்.

இதனிடையே அதே பள்ளியில் பணியாற்றிவரும் உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கவாசகம் மற்றும் சில ஆசிரியர்கள் தொடர்ந்து சிவகுமாருக்கு மனதளவில் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகுமாரும் அவரது அம்மாவிடம் முறையிட்டுள்ளார், இதனையடுத்து சிவகுமாரின் அன்னை பொற்றாமரை அப்பள்ளிக்கு சென்று தயவு செய்து தன் மகனுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கவாசகம் மற்றும் வேறு சில ஆசிரியர்களிடமும் பலமுறை கூரியதாக தெரிகிறது.

ஆனால் தொடர்ந்து சிவகுமாருக்கு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி சிவக்குமார் தனது அறையில் விஷம் அருந்தி உள்ளார். அவருக்கு நாமக்கலில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை அளித்தும் எவ்வித பலனும் இன்றி உயிரிழந்தார்.

சிவக்குமாரை அடக்கம் செய்த பின்னர் அவரது அறையை சோதனை செய்தபோது சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அவர் எழுதியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றது.

அதில் உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கவாசகம் மற்றும் அங்கு உள்ள சில ஆசிரியர்கள் தனது தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக மிகவும் மன வருத்தத்துடன் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் கண்காணிப்ளாளிடம் சிவகுமாரின் அன்னை பொற்றாமரை மற்றும் பிரசன்னா புகார் அளித்துள்ளனர். மேலும் உடற்கூறு ஆய்வில் விவரங்களைப் பெற்று உடனடியாக இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.