அமெரிக்காவில் பால் வாங்க கடைக்குள் சென்ற நபருக்கு அதிர்ஷ்டம் அடித்ததால், கடையை விட்டு வெளியே வரும்போது 1 மில்லயன் டொலர் பரிசு தொகையை பெற்றிருந்தார்.
அதிர்ஷ்டம் என்பது யாருக்கு, எப்படி, எந்த நேரத்தில் அடிக்குமென்றே தெரியாது. அப்படி எதிர்பார்க்காத நேரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அமெரிக்காவில், வர்ஜீனியாவில் உள்ள வடக்கு செஸ்டர்ஃபீல்டில் வசிக்கும் டென்னிஸ் வில்லோபி (Dennis Willoughby), தனது குழந்தைகளுக்கு சாக்லேட் பால் ஷாப்பிங் செய்ய உள்ளூர் 7-Elevenக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அவர் ஒரு கீறல் லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
அந்த லொட்டரி டிக்கெட், வில்லோபியின் தலைவிதியையே மாற்றிவிட்டது. ஏனெனில், அந்த லொட்டரியில் அவருக்கு 1,000,000 பிளாட்டினம் ஜாக்பாட் கிடைத்தது.
இந்த லொட்டரி விளையாட்டிலேயே சிறந்த பரிசை அவர் வென்றுள்ளார். இந்த பரிசை வென்ற இரண்டாவது அதிர்ஷ்டசாலி இவர் தானாம்.
மேலும், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்பது 1,632,000-ல் 1 தான் என லாட்டரி அதிகாரிகளின் கூறினர்.
பரிசு தொகையை வாங்கிக்கொள்வதற்கு வில்லோபிக்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டது.
ஒன்று, 1 மில்லியன் டொலர் பணத்தை அடுத்த 30 ஆண்டுகளுக்கு வருடாந்திர கொடுப்பனவுகள் மூலம் முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.
மற்றோன்று, உடனடியாக 640,205 டொலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 13 கோடி) பணத்தை ஒரு முறை ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். வில்லோபி இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.