2.99 கோடி ரூபாய் சம்பளம்! கூகுள் நிறுவனத்தால் இந்திய மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. குவியும் பாராட்டுகள்

இந்திய மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய ஐடி மாணவர்களுக்கு எப்போதும் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் கடந்த வாரம் ஐடி கல்வி நிலையத்தில் படித்த புவனேஸ்வர் என்கின்ற மாணவருக்கு ஊபர் நிறுவனத்தில் 2,74,250 டாலர் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தது.

இது இந்திய மதிப்பில் 2 கோடியை தாண்டும். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஐடி மாணவி சம்ப்ரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

இவர் 2021 மே மாதம் டெல்லி டெக்னாலஜி கல்லூரியில் பிடெக் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட சம்ப்ரீத்தி யாதவ்க்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 2.99 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்ப்ரீத்தி கூறியதாவது, இந்த நேர்காணலில் 9 சுற்றுகள் இருந்தது. எல்லா தடைகளையும் தாண்டி தற்போது இந்த இடத்தில் நிற்கிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.