லண்டனில் வாழும் நபர் ஒருவர் சமூக வளைத்தலங்களில் இலங்கையிலுள்ள இளம் பெண்களை நண்பர்களாகி அவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் மோடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களில நண்பர்களாகி அவர்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கான பணம் கொள்ளையடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள நபருடன் இலங்கையில் உள்ளவர்கள் குழுவாக இணைந்து இந்த பண மோசடி நடவடிக்கை மேற்கொள்வதாக இலங்கை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லண்டனில் வாழும் கோடீஸ்வரர், வர்த்தகர், வைத்தியர் போன்ற புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு புகைப்படத்தில் இருப்பது தான் என கூறி இலங்கையில் உள்ள நபர்களின் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக புகைப்படங்களை அனுப்புவதே இந்த மோசடியாளரின் முதற்கட்ட நடவடிக்கையாகும்.
இந்த மோசடியாளரின் வலையில் சிக்கிய இலங்கை பெண் ஒருவர் ஊடகத்திடம் தகவல் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு நண்பர் என கூறி சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளம் ஊடாக நபர் ஒருவர் அறிமுகமாகினார். அவர் குறுந்தகவல் அனுப்பினார்.
விலை அதிகமான பொருட்கள் மற்றும் பல பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதாக அவர் கூறினார். இந்த பெறுமதியான வெளிநாட்டு பரிசுகளுக்குள் வெளிநாட்டு பணமும் உள்ளதாக அவர் வீடியோ காணொளி வெளியிட்டு காண்பித்தார்.
அத்துடன் பரிசு பொருட்களை பொதி செய்து, அதனை தபாலில் அனுப்பும் வரையான அனைத்தையும் காணொளியாக அவர் பதிவிட்டுள்ளார்.
இலங்கையர்களை குறி வைத்து இந்த மோசடியான பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் அந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதற்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளனர் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு மாத்திரமின்றி இலங்கையர்கள் பலர் இந்த நபர் போன்ற பலரிடம் பணம் கொள்ளையடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதனால் சமூக வலைத்தளங்களில் பழகும் நண்பர்களிடம் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பெண் வைத்தியர் உட்பட பல பெண்கள் இவ்வாறான மோசடி கும்பலிடம் சிக்கிய பெருந்தொகை பணத்தை இழந்துள்ளமை குறித்து செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.