திருமணத்தன்று மணமகன், தப்பியோடியதால் மணப்பெண் வாளை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேஷியாவின் பாலியைச் சேர்ந்த பெண் நீ புட்டு மெலினா, இவர் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண். இவர் திருமணத்திற்கு முன்பே இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மெலினா தன் வருகால கணவன் தான் என கருதி அவருடன் பழகியதில் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி 12ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திருமணதன்று வேறு ஒரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டார். இதனால் திருமணவீடே பரபரப்பிற்குள்ளானது.
இந்நிலையில் அந்நாட்டு வழக்கப்படி ஒரு வாள் என்பது ஒரு ஆண்மகனின் அடையாளம். அந்த நாட்டு ஆண்கள் வாள்களை கையில் ஏந்தியபடிதான் திருமணம் செய்வார்கள். ஏதாவது சூழ்நிலை காரணமாக திருமணத்திற்கு மணமகன் வரமுடியவில்லலை என்றால் அவர் கையில் ஏந்திய வாளை கொண்டு வந்து பெண் அந்த வாளை தன் கணவனாக கருதி திருமணம் செய்து கொள்வார்கள்.
பின்னர் கணவர் வந்ததும் அவருடன் சேர்ந்து வாழ்வார். ஒருவேளை ஒரு வேலை திருமணம் நடப்பதற்கு முன்பு நிச்சயிக்கப்பட்டவர் இறந்துவிட்டால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றுவர். திருமணம் ஏற்பாடாகி அது நின்றுவிட்டால் அது அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு பெரும் அவமானம். அந்த அவமானம் நீங்க இப்படியாக வாளை திருமணம் செய்து கொள்வார்கள்.
இந்த நிலையில் அவர்களின் வழக்கப்படி திருமணத்தன்று மணமகன் ஓடிப்போனதால் அவராது வாளை மெலினா திருமணம் செய்து கொண்டார். அதன் படி மெலினா வாளை திருமுணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த திருமணம் சட்டப்பூர்வமாக சொல்லது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் இது சம்பிரதாய திருமணம் என்றும், சட்டப்படி , பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஓடிப்போனவர் பெயரை தந்தை என்கிற இடத்தில் சேர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.