பிரான்ஸில் கணிதபாட தேசியமட்டத்திலான பரீட்சையில் முதலாம் இடத்தில் சித்தியடைந்து அந்த நாட்டிற்கு மேகா சந்திரகுமார் என்ற மாணவி பெருமையை சேர்ந்துள்ளார்.
அதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை (09/06/2022) அன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்களின் அழைப்பு பெற்று உதவி செய்யும் நோக்கில் அவர் கேட்டபோது “உங்களது உதவி எனக்குக்கிடைத்தால் எனது குடும்பம் தான் சந்தோஷமடையும் ஆனால் தற்போது எனது நாட்டுமக்கள் உணவிற்காக கஷ்ரப்படுகிறார்கள் அவர்களுக்கு எனது பிந்தநாள் பரிசாக ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டுள்ளார்.
அதற்கிணங்கி அவசர உணவுப்பொதிகள் இலங்கை மக்களுக்கு இன்றைய தினம் (14-06-2022) பிரான்ஸிலிருந்து அனுப்பபடுகிறது.
இவ்வாறு புலம்பெயர் மக்களாகிய நாம் எமது அடுத்த சந்ததிகள் மனங்களிலும் எமது நாட்டுப்பற்றை வளர்க்கவேண்டிய கட்டாயத்திலுள்ளோம் என முகநூலில் Kugan Kugaraj என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
மேலும் மேகா சந்திரகுமார் என்ற மாணவிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.