பக்கத்துவீட்டு நாய் கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாங்கர என்ற பகுதியில் வசிப்பவர் ஸ்ரீலட்சுமி(19). இவர் கோயம்புத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் BCA முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இதனிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்லுகையில், பக்கத்துவீட்டு நாய் ஒன்று லட்சுமியை கடித்துள்ளது.
நோயின் தாக்கம்
பின்னர், அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு நாய் கடித்தற்கான தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவருக்கு எந்த விதமான நோய் தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் சில தினங்களுக்கு பிறகு Rabies நோய் தொற்றுக்கான அறிகுறிகள், ஸ்ரீலட்சுமிக்கு தோன்றியதாக சொல்லப்படுகிறது.
இறுதியில் நேர்ந்த துயரம்
தொடர்ந்து மீண்டும் அந்த இளம்பெண்ணை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த நிலையில், வருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது.
மேலும், Rabies நோய்க்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், நாய் கடிக்கப்பட்டு சுமார் ஒரு மாதங்கள் ஆன நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீலட்சுமி தற்போது உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கு முன்னதாக அந்த மாணவியை கடிப்பதற்கு முன் அந்த நாயின் வீட்டு உரிமையாளரையும் கடித்துள்ளது. ஆனால் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.