பொதுவாக இன்றைய காலத்தில் பலர் உடல் எடையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகள் தான்.
அதன் சுவைக்கு அடிமையாகி பலர் அந்த மோசமான உணவுகளை அடிக்கடி சாப்பிடுகின்றனர்.
இதனால் உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கி, உடல் பருமன், தொப்பை மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது.
இதிலிருந்து விடுபட ஒரு சில இயற்கை பானங்கள் பெரிதும் உதவுகின்றது. அதில் ஒரு சூப்பரான பானம் ஒன்றை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஆப்பிள் – 1
- தேன் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை – 1
- தண்ணீர் – 1 டம்ளர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பின் வடிகட்டினால், பானம் தயார்!
இந்த பானத்தை குளிர வைத்து, தினமும் காலை உணவின் போது குடிக்க வேண்டும்.
இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உங்கள் எடை மற்றும் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.