நீண்ட நேரம் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

உலகின் முதல் செல்லுலர் தொலைபேசியை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தொலைபேசி பாவனை தொடர்பில் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

அதாவது ஒருவர் சராசரியாக ஒரு நாளில் 4.8 மணிநேரத்தை கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதில் செலவிடுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் கையடக்க தொலைபேசியை உருவாக்கிய மார்டின் கூப்பர் ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கேள்வி – 5 மணி நேரத்திற்கும் மேல் கையடக்க தொலைபேசியில் தங்களுடைய நேரத்தை செலவிடுவோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அவர், தன்னுடைய ஒரு நாளில் ஐந்து சதவீத நேரத்தை மட்டும் செல்போனில் செலுத்துவதாவும், நீங்கள் கையடக்க தொலைபேசியில் குறைவான நேரத்தையும், வாழ்க்கையில் அதிக நேரத்தையும் செலவிட வேண்டும்’ எனவும் மார்டின் கூப்பர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல தொலை தொடர்பு சாதனங்களை கண்டுபிடித்தவர் தற்போது மக்களை தங்கள் வாழ்க்கையின் மீது கவனத்தை செலுத்தும்படியும் அறிவுரை வழங்கியுள்ளார்.