உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) ஹிட்லரின் ஆட்சி (Adolf Hitler) , இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது.
500 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) 2022ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து பல பகீர்தகவலை நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள்ளார். ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் திகதி பிறந்த நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) , 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார்.
அதன்படி 2022ம் ஆண்டு அணு குண்டுகள் வெடிக்கும் என கணித்துள்ளார். இந்த ஆண்டில் அணுகுண்டு வெடிப்பின் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அணுகுண்டு வெடிப்பதால் பூமியின் நிலையும் மாறலாம் என கணித்துள்ளார்.
அதோடு 2022 ஆம் ஆண்டின் பணவீக்கத்தையும் கணித்திருந்தார். நோஸ்ட்ராடாமஸ் (Nostradamus) கணிப்பில், இந்த ஆண்டு பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க டாலரின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடையும் என நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டில், மக்கள் தங்கம் , வெள்ளி மற்றும் பிட்காயினில் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். நாஸ்ட்ராடாமஸின் (Nostradamus) கணிப்பில், 2022 ஆம் ஆண்டில், சிறுகோள் பூமிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறை கடலில் விழும் என்றும், அதன் காரணமாக கடுமையான அலைகள் எழுந்து பூமியை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்ளும் என்று நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) கூறியுள்ளார். கடல் நீர் பூமிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாது அவரது (Nostradamus) கணிப்பின்படி, இந்த ஆண்டு பிரான்சில் பெரும் புயல் ஒன்று தாக்கும் என்றும், மேலும் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் போன்ற நிலைமைகளைக் காணலாம். அதோடு, இதற்கு நேர்மாறாக சில இடங்களில் கடும் வறட்சியும் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். அதேவேளை 2022 ஆம் ஆண்டில், பெரும் அழிவுக்குப் பிறகு அமைதி ஏற்படும்.
ஆனால் இந்த அமைதிக்கு முன், உலகம் முழுவதும் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் இருளில் மூழ்கி விடும் என்று நோஸ்ட்ராடாமஸ் (Nostradamus) தனது கணிப்பில் கூறியுள்ளார்.
மேலும் , 2022 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை கட்டுப்படுத்தும் என்றும் தனிப்பட்ட கணினியின் மூளை மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ள்ள அவர் ரோபோக்கள் மனித இனத்தின் மீது தாக்குதக் என்றும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.