தீவிரமடையும் போர்களம்! உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மற்றொரு நாடு

ரஷ்ய உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஆதரவு பெருகிவருகின்றது.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கத் தயக்கம் காட்டிய ஜேர்மனி முதலான நாடுகள் தற்போது ஆயுதங்கள் வழங்கத் திட்டமிட்டு வருகின்றமையே இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

மறைமுக ஆதரவு
இந்நிலையில் நடுநிலை வகிக்கும் நாடான சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றம், தற்போது உக்ரைன் போருக்கு மறைமுக ஆதரவைத் தெரிவிப்பதுபோன்று ஒரு முடிவை எடுத்துள்ளது.

சுவிஸ் ஆயுதங்களை வாங்கிய நாடுகள் இனி அவற்றை உக்ரைன் போன்ற நாடுகளுக்குக் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் விதிகளின்படி, சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை வாங்கும் நாடுகள், அவற்றை வேறொரு நாட்டுக்கு விற்கவோ இலவசமாக கொடுக்கவோ கூடாது.

விதிகளில் ஒரு முக்கிய மாற்றம்

ஆனால் தற்போது சுவிஸ் ஆயுதங்களை வாங்கிய நாடுகள் இனி அவற்றை உக்ரைன் போன்ற நாடுகளுக்குக் கொடுக்கலாம் என தனது விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அனுமதிக்க சுவிஸ் நாடாளுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நேரடியாக ஆயுதங்களை வழங்காமல், வேறொரு நாடு அவற்றை தான் விரும்பும் நாட்டுக்கு கொடுப்பதால் தங்கள் நாடு நடுநிலைமை தவறவில்லை என சுவிஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் பாதுகாப்புக் கொள்கை கமிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.