ஐபோன் மோகத்தினால் டெலிவரி பாயை கொலை செய்து தீவைத்து எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
இளைஞரின் ஐபோன் மோகம்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே நகரைச் சேர்ந்த இளைஞர் ஹேமந்த் தத்தா(20). இவர் ஆன்லைனில் ஐபோன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். இதன் விலை ரூ.46 ஆயிரமாகும்.
கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஐபோனை டெலிவரி செய்வதற்கு நாயக் என்பவர் தத்தா வீட்டுக்கு வந்துள்ள நிலையில், ஐ போனை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லாததால், நாயக்கை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.
பின்பு பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தத்தாவை எரித்து, பிப்ரவரி 11ம் தேதி ஆள்நடமாட்டம் இல்லாத ரயில்வே பாலத்தில் அடியில் கொண்டு போட்டுள்ளார்.
இந்நிலையில் நாயக்கை காணவில்லை என்று அவரது சகோதரர் மஞ்சுநாத் கடந்த 8ம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பிப்ரவரி 16ம் தேதி ரயில் பாலத்திற்கு அடியில் ஆண் சடலம் கருகிய நிலையில் இருந்ததை அறிந்து மஞ்சுநாத் பொலிசாரிடம் தனது சகோதரனாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
பின்பு நாயக்கின் போன் நம்பர் எந்த இடத்தில் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்த பொலிசார் தத்தாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது உண்மையை ஒப்புக்கொண்டதுடன், நாயக்கின் பொருட்களையும் அவர் வைத்திருந்திருந்தது தெரியவந்துள்ளார்.
தற்போது தத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நாயக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூர் சென்ற நிலையில், அங்கு சிறிது காலம் வேலை செய்துவிட்டு, அரசிகெரேவுக்குத் திரும்பி வந்து, கடந்த எட்டு மாதங்களாக ஈகார்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாகப் பணிபுரிந்துள்ளாராம்.